இராணுவத்தினரால் ரூ. 55.7 மில்லியன் பெறுமதியான கஞ்சா கைப்பற்றப்பட்டது

ஏப்ரல் 21, 2021

பூணேரி, பள்ளிக்குடா கடற்கரைக்கு அருகே மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 185.575 கிலோகிராம் கேரள கஞ்சா 54வது பிரவில் கடமைபுரியும் படைவீரர்களினால் கைப்பற்றப்பட்டது.

குறித்த பகுதியில் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக கிடைக்கப்பெற்ற புலனாய்வு தகவலுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது இந்த ஒரு தொகுதி கஞ்சா கைப்பற்றப்பட்டது.

மறைத்து வைக்கப்பட்ட பொருட்களுடன் சந்தேக நபர்கள் எவரும் காணப்படாததனால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கிளிநொச்சி விசேட அதிரடிப்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது,