சட்டவிரோத உலர்ந்த மஞ்சள் கடத்தல் நடவடிக்கை கடற்படையினரால் முறியடிப்பு
ஏப்ரல் 23, 2021வடமேற்கு மற்றும் மேற்கு கடற்பரப்பினூடாக இம்மாதம் 17ம் திகதி முதல் 20ம் திகதி வரை நாட்டுக்குள் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 1263 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளினை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
இதற்கமைய மன்னார், வங்காலை மற்றும் நுரைச்சோலை, தலுவ கடற்கரை பிராந்தியங்களில் இடம்பெற்ற இருவேறு சம்பவங்களின் போது 14 சாக்கு பொதிகளில் பொதியிடப்பட்ட 807 கிலோகிராம் உலர்ந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டன.
முதலில் நீர்கொழும்பு முன்னக்கரைப் பகுதியில் வைத்து14 சாக்கு பொதிகளில் பொதியிடப்பட்ட 461.5 கிலோகிராம் உலர்ந்த மஞ்சளுடன் இரண்டு சந்தேக நபர்களை மேற்கு கடற்படை பிராந்திய கட்டளையகம் கைது செய்தது. இதன் போது சந்தேக நபர்களினால் பயன்படுத்தப்பட்ட இரண்டு டிங்கி படகுகளும் கைப்பற்றப்பட்டன.
மேலும் குடியிருப்பு பகுதி கடற்கரைப் பகுதியில் வடமத்திய கடற்படை கட்டளையாக வீரர்களின் மேற்கொள்ளப்பட்ட இது போன்ற மற்றுமொரு நடவடிக்கையின்போது 15 சாக்கு பொதிகளில் பொதியிடப்பட்ட 543.7 கிலோகிராம் உலர்ந்த மஞ்சளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதேவேளை, பேசாலை கடற்கரைப் பகுதியில் வடமத்திய கடற்படை கட்டளையாக வீரர்களின் மேற்கொள்ளப்பட்ட இது போன்ற மற்றுமொரு நடவடிக்கையின்போது 258.5 கிலோகிராம் உலர்ந்த மஞ்சளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
பேசாலை மற்றும் நீர்கொழும்பு பகுதியில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் 22 தொடக்கம் 44 வயது களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
நீர்கொழும்பு பகுதியில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் கைப்பற்றப்பட்ட உலர்ந்த மஞ்சள் மற்றும் படகு என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் திணைக்கள அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை குடியிருப்பு மற்றும் பேசாலை பகுதிகளில் கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக மன்னார் பொது சுகாதார பரிசோதகர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட உணர்ந்த உலர்ந்த மஞ்சள் மற்றும் படகுகளின் பல மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யால் சுங்கத் திணைக்கள அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கைகள் யாவும் கொவிட் 19 பாதுகப்புக்கான சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.