தென் சூடான் அமைதி காக்கும் படையினரால் மருத்துவ பயிற்சி

ஏப்ரல் 23, 2021

இலங்கை இராணுவ படைகுழுவினரால் நிர்வகிக்கப்படும் தென் சூடானை தளமாகக் கொண்ட நிலை II வைத்தியசாலையில் பணி புரியும் படை குழுவினரால் ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளே பராமரித்தல் தொடர்பான மருத்துவ பயிற்சி அண்மையில் நடாத்தப்பட்டது.

இந்த மருத்துவ பயிற்சியில் நிலை II மருத்துவமனையில் செயல்பாட்டு தயார்நிலை மதிப்பீட்டிற்கான ஏற்பாடுகள் மற்றும் அமைதி காக்கும் பணிகளில் ஈடுபடும் வேளையில் வாந்தி மற்றும் பிற பொது அவசரநிலைகளில் செயற்படும் விதம் மற்றும் தலை, மார்பு மற்றும் அடிவயிற்றில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு சிகிச்சையளித்தல் தொடர்பான ஒத்திகை சிகிச்சை அளிக்கும் முறைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த மருத்துவ பயிற்சியில் விசேட வைத்திய நிபுணர்கள் வைத்திய அதிகாரிகள், தாதிகள், மருந்தக அதிகாரிகள் மற்றும் விமான வைத்திய குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட மருத்துவ ஊழியர்கள் பங்குபற்றினர்.