இந்திய பாதுகாப்பு செயலாளர் இலங்கை வருகை

ஏப்ரல் 07, 2019

இந்திய பாதுகாப்பு செயலாளர் திரு. சஞ்ஜே மித்ரா அவர்கள் உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (ஏப்ரல், 07)இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

வருடாந்த பாதுகாப்பு கருத்தரங்கில் கலந்துகொள்ளும் பொருட்டு இந்திய பாதுகாப்பு செயலாளர் தலைமையிலான இராஜதந்திர குழுவினர் நாட்டை வந்தடைந்தனர்.

இவ் விஜயத்தின்போது இந்திய பாதுகாப்பு செயலாளர் திரு. மித்ரா அவர்கள், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, பாதுகாப்பு செயலாளர் திரு ஹேமசிறி பெர்னாண்டோ, பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி மற்றும் முப்படைகளின் தளபதிகள் ஆகியோரை சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.