இராணுவ போர் வீரர்களுக்கு ஸ்கூபா-சுழியோடல் பயிற்சி

ஏப்ரல் 27, 2021

இலங்கை இராணுவத்தின் மாற்றுத்திறனாளிகளான போர்வீரர்கள் அண்மையில் ஹிக்கடு சர்வதேச சுழியோடல் பயிற்சி பாடசாலையில்  விஷேட ஸ்கூபா-சுழியோடல் பயிற்சியை பெற்றுக் கொண்டனர்.

இராணுவ மறுவாழ்வு பணியகத்தினால் ஆரம்பிக்கப்பட்ட இந்த பயிற்சி திட்டத்தில் கலந்துகொண்ட மாற்றுத்திறனாளிகளான படை வீரர்களுக்கு ஸ்கூபா-சுழியோடல் பயிற்றுனரான ஷெஹான் பிலப்பிட்டியவினால் பயிற்சியளிக்கப்பட்டது.

இந்த பயிற்சி திட்டத்தின் அன்குரார்பன நிகழ்வில் இராணுவ புனர்வாழ்வு பணியகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர். துஷான் சேனாரத்ன மற்றும் 10 போர்வீரர்கள் பங்கேற்றனர்.