பாதுகாப்பு செயலாளர் சீன பாதுகாப்பு அமைச்சரை வரவேற்றார்
ஏப்ரல் 27, 2021சீன தேசத்து கவுன்சிலரும் பாதுகாப்பு அமைச்சருமான ஜெனரல் வீ ஃபெங் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சற்று முன்னர் ( ஏப்ரல், 27) இலங்கையை வந்தடைந்தார்.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்த சீன பாதுகாப்பு அமைச்சரை பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) தலைமையிலான பாதுகாப்பு அமைச்சின் பிரமுகர்கள் வரவேற்றனர்.
விஷேட விமானத்தில் வருகை தந்த சீன பிரதிநிதிகள் குழுவுக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இலங்கை கலாச்சார மரபுகளுக்கமைய வரவேற்பளிக்கப்பட்டது.
வருகை தந்துள்ள சீன பாதுகாப்பு அமைச்சர், ஜனாதிபதி அதிமேதகு கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் கெளரவ மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரை சந்தித்து இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளார்.
சீன பாதுகாப்பு அதிகாரிகளின் வாழ்கையின் வருகை மற்றும் அவர்களுக்கான வரவேற்பு நிகழ்வுகள் என்பன கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைய இடம்பெற்றன.
இந்த நிகழ்வில் இலங்கைக்கான சீனத் தூதுவர் அதிமேதகு கீ செங்ஹோங், பாதுகாப்பு பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, விமானப்படை பிரதம அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் பிரசன்ன பாயோ, சீன தூதரக அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.