புங்குடுதீவில் இருந்து நயினாதீவுக்கு செல்லும் செயலிழந்த படகு கடற்படையினரால் திருத்தம்
ஏப்ரல் 28, 2021இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் இராணுவ சிவில் சமூக நலத் திட்டங்களின் ஒரு பகுதியாக வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான புங்குடுதீவில் இருந்து நயினாதீவு வரை பொருட்கள் மற்றும் ஆட்களை ஏற்றிச் செல்லும் செயலிழந்த படகு திருத்தம் செய்யப்பட்டது.
இந்தப் படகு பல மாதங்களாக சேதமடைந்த நிலையில் காணப்பட்டமையினால் நயினா தீவில் வசிக்கும் பொதுமக்களின் நாளாந்த போக்குவரத்து நடவடிக்கைகளை தடைப்பட்டிருந்ததாக கடற்படை தெரிவித்துள்ளது.
மேலும் இந்த படகு பல ஆண்டுகளாக திருத்தப்படாத நிலையில் நைனாதீவு கடற்பரப்பில் கைவிடப்பட்டிருந்தது.
சேதமடைந்த படகின் பகுதிகள் சிலகடலில் காணப்பட்ட நிலையில் அவைகளை வடக்கு கடற்படை கட்டளையகத்தின் சுழியோடிகள் பிரிவு வீரர்கள் மீள பொருத்தி படகினை சரிசெய்யததாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.
கடற் படையினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த பிரயத்தனம் காரணமாக கைவிடப்பட்டிருந்த நிலையில் இருந்தபடகு மீள செயற்படும் நிலைக்கு கொண்டுவரப்பட்டது. கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட இந்த செயற்பாட்டினை யாழில் உள்ள அரசாங்க அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாராட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.