கடற்படையினரும் விஷேட அதிரடிப்படையினரும் இணைந்து போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை
மே 05, 2021ராஜகிரிய பிரதேசத்தில் கடற்படையினரும் விஷேட அதிரடிப்படையினரும் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது சுமார் 313 கிராம் மற்றும் 250 மில்லி கிராம் ஐஸ் ரக போதை பொருள், சுமார் 47 கிராம் மற்றும் 600 மில்லி கிராம் ஹஷிஷ் போதை பொருள் ஆகியவற்றுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
போதைப்பொருட்களை விற்பனை செய்ய முயற்சித்தபோது குறித்த சந்தேக நபர்களை கடற்படையினரும் விஷேட அதிரடிப்படையினரும் இணைந்து கைது செய்ததாக கடற்படை தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பொரளை பிரதேசத்தைச் சேர்ந்த 26 தொடக்கம் 30 வயதுக்குட்பட்டவர்கள் என கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்கள் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொரள்ள பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கை கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்டதாக கடற்படை உறுதிப்படுத்தியுள்ளது.