தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனம் ‘போலி செய்திகள்’ குறித்து அவதானம்

மே 10, 2021

தேசிய பாதுகாப்பு குறித்த முதன்மை சிந்தனைக் குழுவான தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனத்தினால் போலி செய்திகள் மற்றும் அதனால் தேசிய பாதுகாப்புக்கு ஏற்படும் அச்சுறுத்தல் தொடர்பான விழிப்புணர்வை மேம்படுத்தும் கலந்துரையாடல் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த கலந்துரையாடலில் பிரதம சொற்பொழிவாளராக கலந்துகொண்ட அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மொஹான் சமரநாயக்க, டிஜிட்டல் யுகம் வரையான பரிணாம வளர்ச்சியை மையமாகக் கொண்ட போலிச் செய்திகளின் வரையறையை மறுபரிசீலனை செய்வது, போலிச் செய்திகளின் புழக்கத்தின் நோக்கங்கள் மற்றும் அதைக் கட்டுப்படுத்துவதில் இலங்கை அடைந்த முன்னேற்றம் தொடர்பாக கருத்து தெரிவித்தார்.

இந்த சொற்பொழிவுகள் தவறான தகவல்களைப் பரப்புவதற்குப் பின்னால் உள்ள நோக்கங்கள் குறித்தும் கவனம் செலுத்துகின்ற அதேவேளை உதாரணங்களை மேற்கோள் காட்டுவது உட்பட பல காரணிகள் தொடர்பாக விளக்கமளிப்பதாக அமைந்திருந்து.

அரசியலில் ஏற்படும் செல்வாக்குகள் இந்த கலந்துரையாடலில் உள்ளடங்கியிருந்ததுடன், பொய்யாக இட்டுக்கட்டப்பட்ட தகவல்கள் ஆட்சி மாற்றங்களுக்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டது.

தகவலின் நம்பகத்தன்மையை சுய மதிப்பீடு செய்வதைப் பொறுத்தவரை, மூலத்தின் நம்பகத்தன்மையைக் கண்டறிதல், தலைப்புக்குப் பின்னால் படிப்பது மற்றும் உள்ளடக்கத்தை விமர்சன ரீதியாக ஆராய்வது, ஆதரவு ஆதாரங்கள் மற்றும் திகதிகளைச் சரிபார்ப்பது மற்றும் ஆசிரியரின் நம்பகத்தன்மையை மதிப்பிடுவது போன்ற பல காரணிகளும் அமர்வின் போது கலந்துரையாடப்பட்டன.

இலங்கை போன்று நாட்டில் போலிச் செய்திகளுக்கு எதிராக உள்ளூர் கட்டமைப்பில் தகவல்களை ஒழுங்குபடுத்தும் பொறிமுறை தொடர்பிலும் கலந்துரையாடலில் ஆராயப்பட்டது.

மனப்பான்மை மாற்றம் முதல் கொள்கை வகுத்தல் வரையிலான பிரச்சனைகளுக்கு சமரநாயக்க பயனுறுதி மிக்க பல்வேறு தீர்வுகளை வழங்கினார்.

இந்த கலந்துரையாடலில் அரச நிறுவன பிரதிநிதிகள், முப்படை வீரர்கள், கல்வியலாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் விசேட அதிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவன ஊடக அறிக்கையின் முழு வடிவம் :