ஜனாதிபதி தலைமையில் 'பக் மகா உறுதிமொழி'

ஏப்ரல் 03, 2019

நாட்டைப் போதையிலிருந்து விடுதலை பெறச் செய்யும் எண்ணக்கருவிலான 'பக் மகா திவுரும' சித்திரை மாத உறுதிமொழி வழங்கும் நிகழ்வு இன்று (மார்ச், 03) நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டது. இதன் பிரதான நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில், சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் வரலாற்று சிறப்புமிக்க சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்ற பிரதான நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் திரு. ஹேமசிறி பெர்னாண்டோ அவர்கள் கலந்து கொண்டனர். இதன்போது நாட்டைப் போதையிலிருந்து விடுதலை பெறச் செய்யும் எண்ணக்கருவிலான உறுதிமொழி மும்மொழிகளிலும் எடுக்கப்பட்டது.

இதேவேளை, போதைபொருளற்ற நாடு எனும் தொனிப்பொருளில் போதைபொருள் ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள முப்படையினர், பொலிஸ், சிவில் பாதுகாப்பு படை வீரர்கள் அதனுடன் தொடர்புடைய அரச திணைக்கள அதிகாரிகள் ஆகியோரை கௌரவிக்கும் நிகழ்வு கொழும்பில் உள்ள இலங்கை மன்றக்கல்லூரியில் ஜனாதிபதி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்விற்கு வருகை தந்த ஜனாதிபதி அவர்களை பாதுகாப்பு செயலாளர் திரு. ஹேமசிறி பெர்னாண்டோ அவர்கள் வரவேற்றார்.

அதனுடன் இணைந்ததாக பாதுகாப்பு அமைச்சிலும் நாட்டைப் போதையிலிருந்து விடுதலை பெறச் செய்யும் எண்ணக்கருவிலான 'பக் மகா திவுரும' சித்திரை மாத உறுதிமொழி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளர் திரு. என்கேஜிகே நெம்மேவத்த அவர்களின் தலைமையில் பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வில் அமைச்சின் அதிகாரிகள் அனைவரும் இந்த சித்திரை மாத உறுதிமொழியை மேற்கொண்டனர்.

சட்ட அமலாக்க, கலால் மற்றும் பிற முகவர் நிலயங்கள் உற்பட முப்படவீரர்கள் ஆகியோரால் ஜனாதிபதி தலைமையில் முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் தடுப்பு பிரச்சாரம், பெரிய மற்றும் சிறிய ஒழுங்கமைக்கப்பட்ட போதைப் பொருள் கடத்தல் மோசடிகளை முறியடிப்பதில் பெரும் வெற்றி கண்டுள்ளது. இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மூலம் நிலத்திலும் கடலிலும் போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

பாதுகாப்பு படையினரால் கைப்பற்றப்பட்ட 769 கிலோகிராம் கொக்கேன் போதைப்பொருளை பகிரங்கமாக அழிக்கும் நடவடிக்கை இம்மாதம் முதலாம் திகதி களனி களஞ்சியத் தொகுதியில் இடம்பெற்றது. போதைப்பொருள் அழிவுக்குற்படுத்தும் இவ் வரலாற்று நிகழ்வின்போது ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் கலந்துகொண்டார். இது பொருமளவிலான போதைப்பொருள்கள் பகிரங்கமாக அழிக்கப்பட்ட இரண்டாவது சந்தர்ப்பமாகும்.

இந்நிகழ்வில் சமய தலைவர்கள், பிரதமர், சபாநாயகர், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், ஆளுநர்கள், பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி, முப்படைகளின் தளபதிகள், பொலிஸ் மா அதிபர், சிரேஷ்ட அரச அதிகாரிகள், பொதுமக்கள், மற்றும் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு உறுதிமொழி எடுத்தமை குறிப்பிடத்தக்கது.