கடற்படை சுகாதாரத்துறைக்கு மேலும் வழிகளைத் திறக்கிறது
மே 10, 2021சுகாதார வசதிகளை மேம்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சிகளை ஒத்துழைப்பு வழங்கும் வகையில் இலங்கை கடற்படை கொரோன வைரஸ் நோயாளிகளுக்கு 200 படுக்கைகள் கொண்ட ஒரு இடைநிலை பராமரிப்பு மையத்தை பூச கடற்படை தளத்தில் திறந்து வைத்தது.
இந்த செயல்முறைக்கு மேலும் உதவுவதன் மூலம் நாட்டில் வைரஸ் பாதிப்புக்குள்ளானோரின் அதிகரிப்பினால் ஏற்பட்ட கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான வசதிகளை விரிவுபடுத்துவதற்கான பல திட்டங்களை கடற்படை முன்னெடுக்கின்றது.
இதேவேளை, கடற்படை கம்பஹா, வெரலவத்தை பிரதேசத்தில் உள்ள ஒரு மூடிய தொழிற்சாலையை 2000 படுக்கைகள் கொண்ட இடைநிலை பராமரிப்பு மையத்தை உருவாக்கி வருகின்றது.
அத்துடன் கம்பஹா பொது வைத்தியசாலையில் 50 படுக்கைகள் மற்றும் மினுவங்கொட ஆதார வைத்தியசாலையில் 35 படுக்கைகள் கொண்ட வசதிகளை விரிவுபடுத்தியுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது
மேலும், வதுபிட்டி வல ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக 20 படுக்கைகள் கொண்ட ஒரு வார்டை நிறுவ பகுதியளவில் கட்டி முடிக்கப்பட்ட 3 கட்டிடங்களை பயன்படுத்தி நிர்மாணித்துள்ளது.