வைரஸ் பரவலை தடுக்க மேலும் கட்டுப்பாடுகள் விதிப்பு

மே 10, 2021

அனைத்து மாகாணங்களுக்கிடையிலான பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கவும், அனைத்து கூட்டங்கள் மற்றும் செயல்பாடுகளை ரத்து செய்யவும், வணிக நிறுவனங்களில் நுழைந்து தங்கியிருப்பவர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்தவும், பாதிக்கப்பட்டவர்கள் அதிக எண்ணிக்கையில் அடையாளம் காணப்பட்ட பகுதிகளை மே 30 வரை தனிமைப்படுத்தவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

மக்களின் இயல்பு வாழ்க்கை சீர்குலைக்காத வகையில் குறித்த கட்டுப்பாடுகளை மேற்கொள்ளும் அதேவேளை, அத்தியாவசிய சேவைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதை  உறுதிசெய்து சரியான நடைமுறைகளைப் பின்பற்றவும் ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

கோவிட் -19 தொற்றுநோய்க்கு முற்றுப்புள்ளி வைக்க அனைத்து தரப்பினருடனும் இடம்பெற்ற  கலந்துரையாடலின் போது ஜனாதிபதி இந்த கருத்துக்களை தெரிவித்ததாக  ஜனாதிபதியின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.