கந்தளாயில் இடைத்தங்கல் சிகிச்சை நிலையம் இராணுவத்தினரால் ஸ்தாபிப்பு
மே 12, 2021கந்தளாயில் இடைத்தங்கல் சிகிச்சை நிலையம் இராணுவத்தினரால் ஸ்தாபிப்பு
கந்தளாய் இளைஞர் சேவை நிலையம் 150 படுக்கைகளைக் கொண்ட இடைத்தங்கல் சிகிச்சை நிலையமாக இராணுவத்தினரால் மாற்றியமைக்கப்பட்டது.
கொரோனா வைரஸ் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக இந்த வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
இராணுவத் தளபதி ஜெனரல் ஷேவேந்திர சில்வாவின் பணிப்புரைக்கமைய கிழக்கு பாதுகாப்பு படை கட்டளைதளபதி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரியவின் மேற்பார்வையின் கீழ் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
திருகோணமலை மாவட்ட செயலாளரும் பிராந்திய சுகாதார பணிப்பளாரும் இந்தத் திட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்கியதாக இராணுவம் தெரிவித்துள்ளது.