பிரித்தானிய கடற்படைக் கப்பலைப் பார்வையிட பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் விஜயம்

ஏப்ரல் 03, 2019

பிரித்தானிய கடற்படைக்குச் சொந்தமான எச்எம்எஸ் "மொன்ட்ரோஸ்" கப்பலை பார்வையிடுவதற்காக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்கள் கொழும்பு துறைமுகத்திற்கு இன்று (ஏப்ரல்,03)விஜயம் செய்தார். எச்எம்எஸ் "மொன்ட்ரோஸ்" கடற்படை கப்பல் நல்லெண்ண விஜயமொன்றினை மேற்கொண்டு செவ்வாய் கிழமையன்று (ஏப்ரல், 02) இலங்கையை வந்தடைந்தது. குறித்த கப்பலுக்கு வருகை தந்த இராஜாங்க அமைச்சரை கப்பலின் கட்டளைத்தளபதி கொமாண்டர் கோனோர் ஒ நீல் அவர்கள் வரவேற்றார்.

மேலும், இவ்விஜயத்தின் போது இராஜாங்க அமைச்சர் மற்றும் கப்பலின் கட்டளைத்தளபதி ஆகியோரிடையே நினைவுச்சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

இந்நிகழ்வில் இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர், இலங்கை கடற்படையின் சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.