'டக்டே' சூறாவளி தொடர்பில் அவதானமாக செயற்படவும்
மே 15, 2021தென்கிழக்கு அரேபிய கடலில் குறைந்த காற்றழுத்தம் காரணமாக உருவாகியுள்ள தாழமுக்கம் ‘டக்டே’ எனும் சூறாவளியாக உருவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்திற்குள் இது கடுமையான சூறாவளியாக மாறும் வாய்ப்புள்ளதாக அத்திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
இந்த அமைப்பு மே 18ம் திகதி காலை வேளையில் குஜராத் கடற்கரையை நோக்கி வடக்கு, வடமேற்கு திசை நோக்கி நகர வாய்ப்புள்ளது.
இந்த அமைப்பின் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை படிப்படியாக சீரடையும் என எதிர்பார்ப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் எதிர்வு கூறியுள்ளது.