ரணவிருசேவா அதிகார சபையினால் இரத்ததான நிகழ்வு ஏற்பாடு

ஏப்ரல் 02, 2019

அண்மையில் ரணவிருசேவா அதிகார சபையினால் இரத்ததான நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இவ் இரத்ததான நிகழ்வு மகா ஓயா போல்லேகம ரஜ மஹா விகாரையில் சனிக்கிழமையன்று இடம்பெற்றதாக ரணவிருசேவா அதிகார சபை தகவல்கள் தெரிவிக்கின்றன.

அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்ற வருடாந்த போர் வீரர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு அதன் ஒரு பகுதியாக இரத்த தான நிகழ்வு ரணவிரு சேவா அதிகார சபையினால் முன்னெடுக்கப்பட்டது. இவ்விரத்த தான நிகழ்வில் 130 பேர் தமாக முன்வந்து மகா ஓயா வைத்திய சாலையின் இரத்தத் வங்கி பிரிவிற்கு இரத்ததானம் வழங்கினர்.