கடற்படை மற்றும் விசேட அதிரடிப்படை இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில் ஒரு தொகை கஞ்சா கைப்பற்றப்பட்டது

மே 22, 2021

இலங்கை கடற்படை விசேட அதிரடிப்படையினர் இணைந்து மன்னார் பிரதேசத்தில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது 1.45கிலோ கிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

குறித்த சந்தேக நபர், தம்மிடம் உள்ள கேரள கஞ்சாவினை விற்பனை செய்ய முயற்சித்த போது கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இந்த சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபட்ட 20 வயதுடைய சந்தேக நபர் மன்னார் செல்வ நகர் பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக நடவடிக்கைகளுக்காக மன்னார் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இந்த தேடுதல் நடவடிக்கை சுகாதார அறிவுறுத்தலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்டதாக கடற்படை உறுதிப்படுத்தியுள்ளது.