இராணுவத்தினரால் சிவில் ஊழியருக்கு புதிய வீடு
ஏப்ரல் 01, 2019வன்னி பாதுகாப்பு படையின் கீழுள்ள இலங்கை இராணுவ வீரர்களினால் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடொன்றுக்கு இராணுவத்தில் பணிபுரியும் சிவில் ஊழியர் ஒருவர் பயனாளியாகிறார். குறித்த சிவில் ஊழியர் நிதி சிக்கல்களை எதிர்கொண்டுள்ளமை தொடர்பாக இராணுவ அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவந்ததன் பலனாக இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த வீட்டின் நிர்மாணப்பணிகளை 212 படைப்பிரிவின் இலங்கை கவச படைப்பிரிவு வீரர்கள் 7 (தொண்டர்) மேற்கொண்டுள்ளனர். இப்புதிய வீடு மின்சாரம், குடிநீர் மற்றும் ஏனைய அனைத்து வசதிகளுடனும் காணப்படுவதுடன், இதற்கான நிதி பங்களிப்பு தனியார் நன்கொடையாலர்களின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த பயனாளி குடும்பத்திற்கு ரூபாய் 50,000.00 பெறுமதியான தளபாடங்கள் உட்பட வீட்டுக்கு தேவையான பொருட்களும் வழங்கப்பட்டுள்ளன. இப்பயனாளியின் மகள் பாடசாலை சென்று வருவதற்காக இராணுவ அதிகாரிகள் இருவர் புதிய துவிச்சக்கர வண்டி ஒன்றினை அன்பளிப்பு செய்துள்ளனர்.
வன்னி பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி, மேஜர் ஜெனெரல் குமுது பெரேரா அவர்களின் பங்கேற்புடன் இடம்பெற்ற நிகழ்வின்போது இப்புதிய வீடு பயனாளிகள் குடும்பத்தினரிடம் கையளிக்கப்பட்டது.