சுகாதார தேவைகளுக்காக விமானப்படையினர் இரத்த தானம்

மே 22, 2021

நாட்டில்  வைரஸ்தொற்று பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள நிலைமைகளைக் கருத்தில் கொண்டு இலங்கை விமானப்படை,  மஹரகம ‘அபேக்ஷா’ வைத்தியசாலையுடன்  இணைந்து கொழும்பு ரைபிள் கிரீன்  மைதானத்தில் நேற்று (மே 21)  இரத்த தானம் வழங்கும் நிகழ்வினை ஏற்பாடு செய்தது.

நாட்டில் தற்போது  நிலவும் தொற்றுநோய்களின் போது இரத்தத்தின் தேவையை கருதி புற்றுநோய் மருத்துவமனையின் இரத்த வங்கிக்கு இரத்த மாதிரிகளின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்த இரத்த தானம் செய்யும் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

இந்த இரத்ததான நிகழ்வு  விமானப்படையின் சேவா வனிதா பிரிவுத் தலைவி சர்மினி பத்திரனவின் வழிகாட்டுதலின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டது.

குறித்த இரத்ததான நிகழ்வு, சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்டதாக விமானப்படை மேலும் தெரிவித்துள்ளது.

Tamil