இராணுவ நிபுணத்துவத்துடன் கட்டப்பட்ட விஷேட அவசர சிகிச்சை பிரிவு முல்லேரியாவில் திறந்து வைப்பு

மே 22, 2021

இலங்கை இராணுவத்தின் நிபுணத்துவத்துடன் கட்டப்பட்ட விஷேட அவசர சிகிச்சை பிரிவு முல்லேரியாவாவில் உள்ள கொழும்பு கிழக்கு ஆதார வைத்தியசாலையில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சியினால் நேற்று (மே 21) திறந்து வைக்கப்பட்டது.

புதிய விஷேட அவசர சிகிச்சை பிரிவில் 150 படுக்கைகள் மற்றும் கொவிட் -19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான அனைத்து வசதிகளயும் கொண்ட 4 ஐசியூ படுக்கைகள் என்பவற்றைக் கொண்ட 8 வார்டுகள் மற்றும்  விஷேட தொற்று கட்டுப்பாட்டு அழுத்த பிரிவு என்பன அடங்குகின்றன. மேலும் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள் இந்த விஷேட பிரிவு தேசிய சுகாதார பாதுகாப்பு உள்கட்டமைப்பை  வழங்குகிறது.

சுகாதார அமைச்சின்  ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டத்திற்கு வரையறுக்கப்பட்ட செலான் வங்கியினால் நிதிஉதவியளிக்கப்பட்டது.

இராணுவத்தின் பொறியியலாளர்  சேவை படைப்பிரிவின் தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் மனித வளங்கள் காரணமாக 50 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டிருந்த இந்த திட்டம் சுமார் 13 மில்லியன் ரூபா செலவில் முழுமையாக நிர்மாணிக்கப்பட்டது. இதன் காரணமாக நாட்டின் தேசிய நிதி விரயமாவது தடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா, செலான் வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி கபில ஆரியரத்ன மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள், சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் சஞ்சீவமுனசிங்க, மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.