கடற்படையின் வெள்ள நிவாரண குழுக்கள் தயார் நிலையில்

மே 23, 2021

தென் மாகாணத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நான்கு வெள்ள நிவாரண குழுக்களை கடற்படை இன்று (மே 23) அனுப்பியுள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியளிக்கவுள்ள கடற்படையின் வெள்ள நிவாரண  அணிகள் இப்போது தவலம பிரதேச செயலகத்தில் உள்ள ஹினிதும மற்றும் எப்பலாவிலும் மற்றும் நாகொட பிரதேச செயலகத்தில் உள்ள நாகொடவிலும் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

தென் மாகாணத்தில் வெள்ள நிலைமைகள் ஏற்படுமாயின் இதன்போது மீட்புப் பணிகளில் ஈடுபட தெற்கு கடற்படை கட்டளையகத்தில் மேலதிக மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனைத் தவிர, மேற்கு கடற்படைக் கட்டளையகத்தைச் சேர்ந்த 26 நிவாரணக் குழுக்களும், வட மத்திய கடற்படைக் கட்டளையகத்தைச் சேர்ந்த ஐந்து வெள்ள நிவாரணக் குழுக்களும், வடமேற்கு கடற்படைக் கட்டளையகத்தைச் சேர்ந்த 18 அணிகளும் மக்களுக்கு நிவாரண நடவடிக்கைகளை வழங்க தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக ஒன்று கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.