விமானப்படையின் அனர்த்த மீட்பு குழு தயார் நிலையில்

மே 24, 2021

நாட்டில் அனர்த்தங்கள் ஏற்படுமாயின் அது தொடர்பில் விரைவாக செயற்பட விமானப்படையின் அனர்த்த மீட்பு குழு மற்றும் விமானங்களை தயார் நிலையில்  வைத்திருக்குமாறு விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரன பணிப்புரை விடுத்துள்ளார். அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் விமானப்படையினரிடம் விடுக்கப்பட்ட  வேண்டுகோளுக்கிணங்கவே அவர் இந்த பணிபுரையை விடுத்துள்ளார்.

இதற்கமைய, சீனக்குடா மற்றும் இரத்மலானையில் அமைந்துள்ள  இலங்கை விமானப்படையின் மூன்றாவது மறைன் ஸ்கொட்ரன் படையணிக்கு சொந்தமான பீச் கிங்  இல. 03  கடலோர கண்காணிப்பு விமானம் அனர்த்த கண்காணிப்பினை மேற்கொண்டு வருகின்றது.

அனர்த்த முகாமைத்துவ பணிகளில் ஈடுபடுவதற்காக, இரத்மலான தளத்தில் உள்ள பெல் 212  மற்றும் இரண்டு பெல் 412 ஹெலிகாப்டர்கள்,  ஹிங்குராகொட தளத்தில் உள்ள  மூன்று பெல் 212 ஹெலிகாப்டர்கள்,  பலாலி நிலையத்தில் உள்ள பெல் 212 ஹெலிகாப்டர்
மற்றும் அனுராதபுர தளத்தில் உள்ள  இரண்டு MI-17 ஹெலிகாப்டர்கள்  விஷேட பயிற்சி பெற்ற விமானப் படை வீரர்களுடன்  மீட்பு நடவடிக்கைகளுக்கு தயாராக உள்ளதாக விமானப்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.