ஹங்வெல்ல வெள்ள நீர் கசிவை தடுக்கும் பணிகளில் இராணுவத்தினர்

மே 24, 2021

பொல்வத்தை, ஹங்வெல்ல பிரதேசத்தில் உள்ள தாழ்நிலப் பகுதிகள் மற்றும் அதனை அண்டிய வீதிகள் களனி கங்கையின் நீர் மட்டும் அதிகரித்ததன் காரணமாக நீரில் மூழ்குவதை தடுக்கும் வகையில் இராணுவத்தினர் களனி கங்கையின் இருமருங்கிலும்  மணல் மூட்டைகளை வைத்தனர்.

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள 10வது தேசிய பாதுகாப்பு படை வீரர்களினால் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையை இராணுவ, பொலிஸ் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய அதிகாரிகள் ஆகியோர் கண்காணித்தனர்