பயணத் தடை ஜூன் 7 வரை நீடிக்கப்பட்டுள்ளது

மே 24, 2021

நாடு முழுவதும் ஜூன் மாதம் 7ம் திகதி வரை பயணக் கட்டுப்பாட்டை  அமுல்படுத்தும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும்  பொதுமக்கள் அத்தியாவசிய மற்றும் மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக இப்பயணத்தடை மூன்று  தினங்கள் (நாளை, மே 31, ஜுன் 04) தளர்த்தப்பட உள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவ்வாறு தளர்த்தப்பட்ட போதிலும் பயணத் தடை தொடர்ந்து அமுலில் இருக்கும் என அவர்  வலியுறுத்தினார்.  

எனினும் தனிமைப் படுத்தப்பட்டுள்ள பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் பயணத் தடை தளர்வு செல்லுபடியாகாது எனவும்  தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.