விமானப்படையினரால் இரசாயன கலவைகள் தெளிப்பு

மே 26, 2021

இலங்கை விமானப்படையின் பெல் 212 ஹெலிகாப்டர்கள் 425 கிலோ தீயணைப்புகாக பயன்படுத்தப்படும் உலர் இரசாயனக் கலவைகளை இன்று காலை 'எக்ஸ்-பிரஸ் பெர்ல்' கப்பலில் மீது தூவியதாக விமானப்படை பேச்சாளர் குரூப் கேப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்தார்.  

பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு கருத்துத் தெரிவித்த குரூப் கெப்டன் விஜேசிங்க, தீயணைப்பு பெற பயன்படுத்தப்படும் உலர்ந்த இரசாயன கலவையுடன் இரண்டாவது தடவை விமானம் அனுப்பப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். 

இதேவேளை, தீயின் காரணமாக எரிந்துகொண்டிருக்கும் குறித்து கப்பலில் கடமையாற்றிய கப்பல் சிப்பந்திகளை நேற்றைய தினம் இலங்கை கடற்படையினர் மீட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.