கடல் சுற்றுச்சூழலை சேதமடைந்த கப்பலின் இருந்து பாதுகாக்க பாடுபடுங்கள் - ஜனாதிபதி

மே 27, 2021
  • கடல் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் சேதத்தை குறைக்க ஜனாதிபதி அறிவுறுத்தல் 
  • நச்சுப் பொருள்களைத் தொடவேண்டாம் என எச்சரிக்கை 

சேதமடைந்துள்ள எம்வி எக்ஸ்- பிரஸ் போர்ள் கப்பலினால் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பினை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பாதுகாப்பு படைகள், கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் பிற பொறுப்பான அரச நிறுவனங்களுக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவ அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

இதற்கமைய, இலங்கை கடற்படை மற்றும் பிற அரச நிறுவனங்கள் எல்லைக் கரையோரத்தில் அடித்து வரப்பட்ட குப்பைகளை அகற்றத் தொடங்கியுள்ளன. 

ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் படி, கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபை ஏற்கனவே கடற்கரையைச் சுற்றியுள்ள நீர் மாதிரிகளை பரிசோதித்து, கப்பல் நிறுவனம், காப்பீட்டு நிறுவனம் மற்றும் பிற தொடர்புடைய ஏஜென்சிகள் உள்ளிட்ட பொறுப்பான தரப்பினரை தொடர்பு கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறன. 

நிலவும் பாதகமான வானிலை குறித்து விழிப்புடன் இருக்குமாறும், எண்ணெய் கசிவு ஏற்பட்டால் கப்பலைச் சுற்றி எண்ணெய் பரவுவதைக் குறைக்க விஷேட கவனம் செலுத்துமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். 

இது தொடர்பில் கடற்படை, விமானப்படை மற்றும் சம்பந்தப்பட்ட பிற தரப்பினரின் முயற்சியை ஜனாதிபதி பாராட்டியதுடன் கடற்கரையை பாதுகாக்குமாறு அவர்களுக்கு உத்தரவிட்டார். 

இதேவேளை, கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவி தர்ஷினி லஹந்தபுர, கடலோரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், தேமடைந்த கப்பலில் இருந்து கரைக்கு அடித்து வரப்படும் விஷப் பொருள்களைத் தொட வேண்டாம் என எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.