யாழ்ப்பாணத்தில் வெடிகுண்டுகளுடன் சந்தேக நபர் ஒருவர் இராணுவத்தினரால் கைது

மே 29, 2021

யாழ், நாகர்கோவில் பகுதியில் உள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமான மீன்பிடித் துறையில் புதைக்கப்பட்டிருந்த சக்தி வாய்ந்த கிளைமோர் குண்டு உள்ளிட்ட ஒரு தொகை வெடிபொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் யாழில் உள்ள இராணுவ வீரர்களினால் நேற்று (மே, 28) கைது செய்யப்பட்டார்.

கிடைக்கப்பெற்ற புலனாய்வுத் தகவலைத் தொடர்ந்து அந்த இடத்தை சுற்றிவளைத்த இராணுவ புலனாய்வுப் படையினர், முன்னாள் கடல் புலி என சந்தேகிக்கப்படும் நபரை கிளேமோர் குண்டு (இரண்டு கிலோ),  ரீ -56  ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 14 தோட்டாக்கள்,   கைத்துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 45 தோட்டாக்கள், ஒரு 12.7  ரக தோட்டா மற்றும் இரண்டு மீட்டர் நீளமான டெட்டனேட்டர் கயிறு என்பன கைப்பற்றப்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் கைப்பற்றப்பட்ட வெடிபொருட்கள் என்பன மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் தீவிரவாத விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது.