களத்தில் கடலோர பாதுகாப்பு படை

மே 29, 2021

தீ காரணமாக சேதமடைந்த கப்பலிலிருந்து வெளியாகி கடற்கரையோரங்களில் தேங்கியிருந்த சுமார் 5,000 கிலோ கிராமுக்கு மேற்பட்ட கழிவு பொருட்கள் இலங்கை கடலோர பாதுகாப்பு படை வீரர்கள் சேகரிக்கப்பட்டு அப்புறப் படுத்தப் பட்டுள்ளது. 

கொழும்பு துறைமுகத்தில் குறித்த சேதமடைந்த கப்பலில் எண்ணெய்க் கசிவு ஏற்படுமிடத்து அந்த கசிவினை தடுக்கும் வகையில் கடலோர பாதுகாப்பு படைக்கு சொந்தமான சமுத்ரரக்ஷா மற்றும் சமாராக்ஷா ஆகிய இரண்டு கப்பல்கள் சகல வளங்களுடன் துறைமுகத்தில் நங்கூரமிட்டு உள்ளது. 
 
குறித்த கடல் பிரதேசத்தின் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டுள்ளதா என கண்டறிய எண்ணெய்க் கசிவு தடுப்பு குழு, எண்ணெய்  கசிவினை கட்டுப்படுத்தும் உபகரணங்களுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக கடலோர பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. 

கடல் சுற்றுச்சூழலுக்கு ஆபத்துக்கள் ஏற்படும் என கண்டறியப்பட்ட நீர்கொழும்பு போன்ற பிரதேசங்களில் விசேட பாதுகாப்பு வலயங்கள் ஏற்படுத்தப் பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மொரட்டுவையலிருந்து மா-ஓயா வரையிலான கடல் சூழலுக்கு ஏற்படும் ஆபத்தை குறைக்க தொடர்ச்சியாக கடற்கரையை சுத்தப்படுத்தல் மற்றும் ஆபத்துக்களை மதிப்பீடு செய்தல் போன்ற பணிகள் கடலோர பாதுகாப்புப் படையினரால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கடலோர பாதுகாப்புப்படை மேலும் தெரிவித்துள்ளது.