கிழக்கில் மேலும் காணிகள் விடுவிப்பு

மார்ச் 28, 2019

கிழக்கு மாகாணத்தில் பாதுகாப்புப் படையினரால் பயன்படுத்தப்பட்ட மற்றுமொரு தொகுதி காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய அண்மையில் (மார்ச், 25) திருகோனமலை ஆளுநர் அலுவலத்தில் இடம்பெற்ற நிகழ்வின்போது, குச்சவெளி பிரதேச செயலகப்பிரிவின் கீழுள்ள திரியாய பிரதேசதத்தில் மூன்று ஏக்கர் தனியார் காணிகளும், கல்முனை பிரதேச செயலகப்பிரிவின் கீழுள்ள அம்பாறை பெரியநிலாவெளி பிரதேசதத்தில் 0.5 ஏக்கர் காணிகளும் மற்றும் திருக்கோவில் பிரதேசதத்தில் இரண்டு ஏக்கர் அரச காணிகளும் கிழக்கு மாகான ஆளுநர் கௌரவ. எம் எல் ஏ எம் ஹிஸ்புல்லாஹ் மற்றும் பிரதி மாவட்ட செயலாளர் ஆகியோரிடத்தில் கையளிக்கப்பட்டதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இக்காணிகள் விடுவிப்பு தொடர்பான ஆவணங்கள் கிழக்கு பாதுகாப்புப் படைகளின் கட்டளை தளபதி, மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர அவர்களினால் கிழக்கு மாகாண ஆளுநரிடம் வைபவ ரீதியாக கையளிக்கப்பட்டது.