சட்டவிரோதமாக சுறா மீனின் செட்டைகள் கடலோர பாதுகாப்பு படையினரால் கைப்பற்றப்பட்டது
மே 31, 2021மீன்பிடி கண்காணிப்பு மற்றும் ஒழுங்குபடுத்தும் கடமைகளை ஒருங்கிணைக்கும் இலங்கை கடலோரப் பாதுகாப்பு படை வீரர்கள் திக்கேவிட்ட மீன்பிடி துறைமுகத்தில் கடமைகளை மேற்கொண்டிருந்தவேளை, தடை செய்யப்பட்ட சுறா மீன்களின் செட்டைகளை வைத்திருந்ததன் பேரில் இரண்டு மீன்பிடி வள்ளங்களுடன் 13 மீனவர்களை வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தடைசெய்யப்பட்ட சுமார் 41 நீல திமிங்கில செட்டைகளை தம்வசம் வைத்திருந்தாக கடலோர பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
கைப்பற்றப்பட்ட நீல திமிங்கில செட்டைகள் மீன்பிடி வள்ளங்களில் குறித்த பகுதியில் சூட்சமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கடலோர பாதுகாப்பு படை வீரர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் என்பன நீர்கொழும்பு கடற்தொழில் பரிசோதகரிடம் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடலோர பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.