மன்னாரில் 8 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது
ஜூன் 02, 2021மன்னார் கரையோரப் பிரதேசத்தில் எட்டு மில்லியன் ரூபா பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டதுடன் அவர்கள் கடத்தல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்திய படகு ஒன்றும் நேற்றைய தினம் (ஜூன், 01) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
கடற்படையினரால் குறித்த பகுதியில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சுமார் 29.8 கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது.
கடற் படையின் வடமத்திய கட்டளையகத்தினால் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின் போது சந்தேகத்துக்கிடமான படகு ஒன்று தடுத்து நிறுத்தப்பட்டதையடுத்து இந்த கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டது.
கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா 14 பொதிகளில் பொதியிடப்பட்டு 2 சாக்குகளில் அடைக்கப்பட்டிருந்ததாக கடற்படை தெரிவித்துள்ளது.
கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் இருவரும் மன்னார் எருக்கலம்பிட்டி யைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட நடவடிக்கை சுகாதார வழி முறைகளுக்கு அமைய முன்னெடுக்கப்பட்டதாக கடற்படை உறுதிப்படுத்தியுள்ளது.