கடற்படை மற்றும் தேசிய நீர்வாழ் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்குமான முகவர் நிலையம் சுற்றுச்சூழல் தொடர்பாக ஆராய்வு
ஜூன் 03, 2021இலங்கை கடற்படையின் நீரியல் ஆய்வு சேவையகத்தினால் இயக்கப்பட்ட தேசிய நீர்வாழ் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்குமான முகவர் நிலையத்தின் ஆய்வுக் கப்பல் மூலம் அண்மையில் தீ விபத்துக்குள்ளான கப்பலின் கடல் பகுதியில் இருந்து நீர் மற்றும் வண்டல் மாதிரிகளை சேகரித்ததாக கடற்படை தெரிவித்துள்ளது.
கப்பல் தீ விபத்துக்குள்ளான சம்பவத்தை தொடர்ந்து இதன் காரணமாக சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பினை மதிப்பீடு செய்வதற்காக கடற்படையின் ஆய்வுக் கப்பல் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
மதிப்பீடு மற்றும் ஆராய்ச்சி பணிகளில் நிபுணத்துவம் வாய்ந்த அதிகாரிகள், தேசிய நீர் வாழ் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்குமான முகவர் நிலையத்தின் விஞ்ஞானிகள் ஆகியோர் இணைந்து இதுபோன்ற பல்வேறு மதிப்பீட்டு மற்றும் ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட்டுள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.