ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களுக்கான விஷேட
மார்ச் 26, 2019பாதுகாப்பு இராஜாங்க அமைச்சினால் ஒய்வு பெற்ற இராணுவ வீரர்களுக்கு சுய தொழில் வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக அவர்களினால் உற்பத்தி செய்யப்பட விவசாய உற்பத்தி பொருட்களுக்கான சந்தை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும் நோக்குடன் பாதுகாப்பு அமைச்சில் இன்று (மார்ச், 26) 'விஷேட சந்தை' இடம்பெற்றது.
இச்சந்தையினை வணிக நடவடிக்கைகளை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளர் திரு. என்கேஜிகே நெம்மேவத்த அவர்கள் வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.
இச்சந்தையில், ஒய்வு பெற்ற இராணுவ வீரர்களினால் உற்பத்தி செய்யப்பட காய்கறிகள், பழங்கள், உள்நாட்டு அரிசி வகைகள், மாவு மற்றும் பருப்புவகைகள்,சுத்தமான தேன், பண்ணை உற்பத்திப்பொருட்கள் மற்றும் விவசாய உபகரணங்கள் என்பன நியாயமான விலையில் விற்பனை செய்யப்பட்டன.
இத்தகைய வர்த்தக சந்தைகள், ஒய்வு பெற்ற இராணுவ வீரர்களுக்கு தங்கள் உற்பத்திகளை சந்தைப்படுத்துவதற்கு ஒரு சிறந்த வழியை வழங்குகின்ற அதேவேளை, நுகர்வோருக்கு தரமான பொருட்களை நியாயமான விலையில் பெற்றுக்கொள்வதற்கும் வாய்ப்பினையும் வழங்குகின்றன.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் ஓய்வுபெற்ற படைவீரர்களுக்கான விவசாய சுய வேலைவாய்ப்பு திட்டம், ஓய்வுபெற்ற படைவீரர்களின் ஓய்வூதியத்திற்கு மேலதிகமாக கூடுதல் வருவாயை அளிப்பதோடு தேசிய மனிதவள கோரிக்கைகளை பூர்த்தி செய்ய அவர்களது நிபுணத்துவத்தை தக்கவைத்துக்கொள்ளவும் உதவுகிறது. இதன் மூலம் அவர்கள் தேசிய அபிவிருத்திக்கும் பங்களிப்பு செய்கின்றமை குறிப்பிடத்தக்கது..