களனி கங்கை கரையோரப் பகுதிக்கு சிவப்பு எச்சரிக்கை

ஜூன் 05, 2021

நாட்டில் தொடர்ச்சியாக கிடைக்கப் பெற்று வரும் மழைவீழ்ச்சி காரணமாக களனி கங்கையின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளதுடன் அடுத்த 6 முதல் 16 மணி நேரத்திற்குள் ஹன்வெல்ல நீர்த் தேக்கத்தின் நீர்மட்டம் 9.0 மீட்டர் வரையும் நகலகம் வீதி தே நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 6.60 அடி வரையும் அதிகரிக்கும் சாத்தியம் ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று காலை 9 மணி முதல் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் களனி கங்கையின் சூழவுள்ள பிரதேசங்களில் சராசரியாக 125 மில்லி மீட்டருக்கு மேற்பட்ட மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தெஹியோவிட்ட, ருவன்வெல்ல, சீதாவக்கை, தொம்பே, ஹோமாகம, கடுவல , பியகம, கொலன்னாவ மற்றும் வத்தளை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் அமைந்துள்ள களனி கங்கைக்கு தாழ்வான பகுதிகளில் தற்போதைய வெள்ள நிலைமை கணிசமாக அதிகரிக்கும் சாத்தியக்கூறுகள் இருப்பதாக நீர்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

எனவே இப்பகுதியில் வசிக்கும் மக்கள் விலைமதிப்பற்ற தங்களது உயிர்களையும் சொத்துக்களையும் பாதுகாக்கும் வகையறா வகையில் விழிப்புடன் இருக்குமாறு நீர்பாசனத் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.