மண்சரிவினால் பாதிக்கப்பட்டவர்களை இராணுவத்தினர் மீட்பு

ஜூன் 05, 2021

மாவனெல்லை, தெவனகல பகுதியில் தொடர்ச்சியான மழை மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிகளில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கமைய, இராணுவத்தின் 8வது சிங்க படையணி வீரர்கள் மண்ணில் புதையுண்டு காணப்பட்ட 23 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் சடலத்தை மீட்டு மாவனல்ல வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாக இராணுவம் தெரிவித்துள்ளது

இந்த சம்பவத்தின்போது காணாமல் போயுள்ள குறித்த உயிரிழந்த பெண்ணின் 56 வயதுடைய தாய் 57 வயதுடைய தந்தை மற்றும் 29 வயதுடைய சகோதரர் ஆகியோரை தேடும் பணிகள் கிராமவாசிகளின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை வரகாபொல அலங்க பகுதியில் மண்சரிவு காரணமாக புதையுண்டு உயிரிழந்த 70 வயதுடைய ஆண் ஒருவரின் சடலத்தை இராணுவத்தினர் மீட்டுள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்த வயோதிபரின் ஊடல் வரகாபொல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் அவரது குடும்ப உறுப்பினர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.