எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பலின் கசிவுகள் தொடர்பில் கடற்படையின் சுழியோடிகள் ஆய்வு

ஜூன் 06, 2021

தீ அனர்த்தத்திற்கு உள்ளன எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பலில் ஏதேனும் கசிவுகள் ஏற்படுகின்றனவா என்பன தொடர்பான ஆய்வு நடவடிக்கைகளில் கடற்படையின் அனுபவம் வாய்ந்த சுழியோடிகள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த ஆய்வு நடவடிக்கைகளின்போது கடற்படை சுழியோடிகள் கப்பலின் எண்ணெய் களஞ்சியம் மற்றும் அதனோடு இணைந்து பகுதிகள் தொடர்பாக ஆராய்ந்தனர்.

மேலும் இவர்கள் நாளைய தினம் (ஜூன், 07) பொரித்த கப்பலிலிருந்து எண்ணெய் கசிவுகள் ஏதாவது ஏற்பட்டுள்ளதா என்பதை அறிய நீர் மாதிரிகள் மற்றும் கடற்சூழல் என்பவற்றை ஆராய உள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.