வெள்ள அனர்த்தத்தின் பின்னர் படையினரின் நடவடிக்கைகள்
ஜூன் 07, 2021கடற்படையின் வெள்ள நிவாரண குழுக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அவசரகால நிவாரண நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.
மேலும், தாழ்வான பகுதிகளில் வெள்ள அபாயத்தைக் தடுக்க அடைப்புக்குள்ளாகியிருந்த வக்வெல்ல பாலத்தினை சுத்தப்படுத்தும் பணிகளில் நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகளுடன் இணைந்து கடற்படையினர் முன்னெடுத்தனர்.
அத்துடன் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் வெள்ள அனர்த்த நிவாரணப் பணிகளில் ஈடுபடுவதற்காக கடற்படையின் 32 மீட்புக் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
சேதமடைந்த ஜா-எலா தண்துகங்கா ஓயா உடைப்பு எடுக்கும்போது ஏற்படும் ஆபத்துக்களை தவிர்ப்பதற்காக முப்படை வீரர்களினால் இதன் கட்டு மணல் மூட்டைகளைக் கொண்டு வலுவாக்க பட்டது.
பாதுகாப்பு அமைச்சின் பணிப்புரைக்கமைய, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நடவடிக்கைகளை வழங்குவதில் முப்படை வீரர்கள் தொடர்ந்தேர்ச்சியாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.