கம்பஹா வெரெளவத்தையில் 650 படுக்கைகளைக் கொண்ட இடைநிலை சிகிச்சை நிலையம் திறந்து வைப்பு

ஜூன் 08, 2021

கடற்படையினரால் கம்பஹா, வெரெளவத்தை பகுதியில் கொவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்  650 படுக்கைகளைக் கொண்ட இடைநிலை சிகிச்சை நிலையம் நேற்றைய தினம் (ஜூன், 7) திறந்து வைக்கப்பட்டது.

நாட்டில் வியாபித்துள்ள கொவிட்-19 பரவல் நிலைமைகளைக் கருத்தில் கொண்டு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் திட்டங்களுக்கு உந்து சக்தி அளிக்கும் வகையில் இயங்கு நிலையில் இல்லாத தொழிற்சாலையினை  இடைநிலை சிகிச்சை நிலையமாக கடற்படை மாற்றி அமைந்துள்ளது.

சுகாதார அமைச்சினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய  கடற்படை வீரர்களின் உடல் உழைப்பினை கொண்டு முதற்கட்ட பணிகள் பூர்த்தி ஆக்கப்பட்ட நிலையில் சுகாதார அமைச்சர் கௌரவ பவித்ரா வன்னியாராச்சி தலைமையில் இந்த சிகிச்சை நிலையம் திறந்து வைக்கப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

கடற்படையின் உத்தேச திட்டத்திற்கு அமைய இந்த தொழிற்சாலை, எதிர்காலத்தில் சுமார்  2000 படுக்கைகளைக் கொண்ட இடைநிலை சிகிச்சை நிலையமாக விஸ்தரிக்கும் நடவடிக்கைகளில் கடற்படை தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.