தென் சூடானில் உள்ள இலங்கை இராணுவ மருத்துவ குழுக்களால் அவசர பிரிவு நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பு
ஜூன் 10, 2021தென் சூடானில் அமைதி காக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள இலங்கை இராணுவத்தின் இரண்டாம் நிலை வைத்தியசாலையில் அவசர பிரிவு நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கப் படுவதுடன் தீவிர சிகிச்சை தேவைப்படும் நோயாளர்களை போர் நகரத்திலிருந்து ஜூபா மற்றும் என்டெப்பே நகர்களுக்கு அனுப்பும் பணிகளில் இலங்கை இராணுவத்தின் மருத்துவ குழுக்கள் ஈடுபட்டுள்ளனர்.
தென் சூடான் போர் நகரில் அமைந்துள்ள இலங்கை இராணுவத்தில் இரண்டாம் நிலை வைத்தியசாலையில் இரண்டு எயார் மெடிக்கல் அணிகள், ஒரு மருத்துவ அணி என்பன மருத்துவ பணிகளில் ஈடுபட்டுள்ள அதேவேளை, அவசர பிரிவு நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வசதிகளைக் கொண்ட ஒரு சத்திர சிகிச்சை கூடம் என்பன அமைந்துள்ளன.
நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வேளையில் அவர்களில் கொவிட் - 19 தொற்றாளர்கள் உள்ள போதிலும் வைத்தியசாலையில் அறுவைச் சிகிச்சை மற்றும் ஏனைய சிகிச்சைகள் என்பன தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக இராணுவம் தெரிவித்துள்ளது.