வெள்ள அனர்த்த எச்சரிக்கை தளர்வு

ஜூன் 10, 2021

ஜூன் 3ம் திகதி  முதல் 6ம் திகதி வரை நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ  பிரிவு வழங்கிய வெள்ள அனர்த்த  எச்சரிக்கைகள் இன்றைய தினம் முதல் தளர்த்தப் படுவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த இரண்டு மணி நேரத்தில் நாட்டின் எப்பாகத்திலும் பலத்த மழை வீழ்ச்சி கிடைக்கப்பெறவில்லை. இதனால் ஆறுகள் மற்றும் நீர் நிலைகளில் உள்ள நீர்மட்டம் குறைந்து வருவதாகவும் இதனால் தாழ் நிலப் பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அனர்த்த எச்சரிக்கை தளர்த்தப் படுவதாக அத்திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

ஆரம்பத்தில் எச்சரிக்கப்பட்ட ஆறுகளில் வெள்ள அபாயங்கள் குறைந்து வருவதாக தெரிவித்த தெரிவித்துள்ள நீர்ப்பாசனத் திணைக்களம், தாழ்வான பகுதிகளில் எஞ்சியிருக்கும் வெள்ள நீரும் அடுத்த சில தினங்களில் குறைந்துவிடும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

கடந்த வாரம் பெய்த பலத்த மழை காரணமாக நாட்டில் 200,000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன்  20 உயிரிழப்பு சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

Tamil