இலங்கை இராணுவ மருத்துவக் கல்லூரியின் வருடாந்த அமர்வு ஆரம்பம்
மார்ச் 24, 2019இலங்கை இராணுவ மருத்துவக் கல்லூரியின் (SLCOMM) மூன்றாவது வருடாந்த கல்வியாண்டுக்கான அங்குரார்ப்பன நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் ,22) அத்திட்டிய ஈகிள்ஸ் லேக்சைட் மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமாது. இந்நிகழ்வு, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
மேலும் இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக பாதுகாப்பு செயலாளர் திரு. ஹேமசிறி பெர்னாண்டோ அவர்கள் கலந்து கொண்டார்.
இவ்வருடாந்த அமர்வு "இராணுவ மருத்துவம் - முன்னோக்கப்பார்வை: இராணுவ-சிவில் மருத்துவ ஒத்துழைப்புக்களை மேம்படுத்தல்" எனும் தொனிப்பொருளில் அண்மையில் ( மார்ச், 23 மற்றும் 24 ) இடம்பெற்றது . இவ் அமர்வுகளில் 32 வெளிநாட்டு மற்றும் உள்நட்டு விரிவுரையாளர்கள், போரியல் விபத்து பராமரிப்பு, கடலடி நீர் மருத்துவம், விமான மருத்துவம், பெண்கள் மற்றும் குழந்தைகள் மற்றும் இராணுவ மருத்துவம், அதீத பராமரிப்பு மருத்துவம், ஊனமுற்றோர் மற்றும் என்பியல், பல் மருத்துவம் : ஒரு சிறந்த விளைவு, உணவு மற்றும் உடல் பருமன் மற்றும் விளையாட்டு மருத்துவம் ஆகிய தொனிப்பொருளில் தமது கருத்துக்களையும் அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டனர்.
இவ்வமர்வின் அங்குரார்ப்பன உரை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்களினால் நிகழ்த்தப்பட்டது. விழா அறிமுக உரை இராணுவ மருத்துவ சர்வதேச செயற்குழுவின் செயலாளர் நாயம் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் டாக்டர் ரோஜர் வான் ஹூப் (எம்டி) அவர்களினால் நிகழ்த்தப்பட்டது. அங்குரார்ப்பன உரை நிகழ்த்திய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் , இவ்வாறன அமர்வுகள் இராணுவ மருத்துவத்தின் தொழில்முறை தரத்தை உயர்த்த கூடியவை என தெரிவித்தார். இராணுவ மருதத்துவம் நீண்ட வரலாற்றினைக் கொண்டது எனவும் போர்க்கள மருத்துவ உதவி மருத்துவ துறையில் முன்னேற்றத்திற்கு வழிகோலியது எனவும் அவர் தெரிவித்தார்.
நாட்டில் மோதல்கள் இடம்பெற்ற வேளைகளில், தமது உயிர்களுக்கு அபாயம் நிலவிய போதிலும் கூட மருத்துவப் பணியாளர்கள் தமது சேவைகளை திறம்பட செய்தனர். இராணுவ மருந்துவம் பிரதான மருத்துவத்தின் முன்னேற்றத்திற்கு முக்கிய பங்காற்றியுள்ளது. இதற்கேற்ப இராணுவ மருத்துவ பயிற்சியாளர்கள் திறன்களை விருத்தி செய்வதற்காக செய்யப்படும் முதலீடு இராணவத்தினருக்கு மட்டுமல்லாது பொது மக்களுக்கும் சிறந்த சேவையினை பெற்றுக்கொடுக்க கூடியதாக அமையும் என அவர் மேலும்தெரிவித்தார்.
இராணுவ மற்றும் சிவில் மருத்துவ சேவை ஆகியவற்றிற்கு இடையிலான பிரிவு செயற்கை தன்மை வாய்ந்ததும் போலியானதும் கூட. இராணுவ மருத்துவமுன்னேற்றம் தனிநபர்களின் சிகிச்சைக்கு மட்டுமல்லாமல், மருத்துவ பராமரிப்பு அமைப்புகளுக்கும் பொருந்தக் கூடியதாகும். இன்றைய நவீன பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்வதில், இராணுவ மருத்துவ பயிற்சியாளர்கள் முன்னணியில் இருந்து வருகின்றனர். மேலும் அவர்கள், உயிரியல் பயங்கரவாதம், இயற்கை பேரழிவுகள் மற்றும் கதிரியக்கம் அல்லது இரசாயனவியல் மாசு போன்ற மனிதனால் உருவாக்கப்பட்ட அழிவுகள் போன்றவற்றின் போது ஏற்படுகின்ற தொற்றுநோய் நிலைகளின்போது அவற்றினை கட்டுப்படுத்துவதற்கான மனிதாபிமான உதவிகளை அளித்து வருகின்றனர் என குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய பாதுகாப்பு செயலாளர் திரு. ஹேமசிறி பெர்னாண்டோ அவர்கள் தனது உரையில், நாட்டின் அபிவிருத்திக்கு பாதுகாப்பு படையினர், சகல துறைகளிலும் தமது பங்களிபிணை நல்கிவரும் இச் சந்தர்ப்பத்தில் இவ்அமர்வு நடைபெறுகிறது என தெரிவித்தார்.
விருத்தி செய்யப்படும் அதிநவீன ஆயுதங்களுக்கு இணையாக போர்க்கள மருத்துவம் மதிப்பிடப்படவேண்டும். அந்த மிகப்பெரிய பணியில் ஈட்பட்டுவரும் மருத்துவ உதவியாளர்களின் பங்களிப்பு இவ்வகையான அமர்வுகளில் பாராட்டப்படுவதாக அவர் தெரிவித்தார். நாம் எமது சொந்த நாட்டில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக போரினை அனுபவித்துள்ளோம். அந்த இருண்ட யுகத்தில் இராணுவ மற்றும் பல் மருத்துவத்துறையின் மருத்துவ சேவைகள் நன்றியுடன் நினைவுகூரப்படக்கூடியவை ஆகும் என குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் முப்படைகளின் தளபதிகள், சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், ராஜதந்திரிகள், துறைசார் புத்திஜீவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.