அன்டனோவ் - 32 ரக மூன்று விமானங்கள் பாதுகாப்புச் செயலாளரினால் வரவேற்பு

ஜூன் 12, 2021

மாற்றியமைக்கும் செயல்முறை நிறைவு செய்யப்பட்ட இலங்கை விமானப்படைக்கு  சொந்தமான மூன்று அன்டோனோவ் -32 ரக விமானங்கள் நேற்று (ஜூன் 11) மாலை நாடு திரும்பியுள்ளன.

இதற்கமைய பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்த இந்த மூன்று அண்டனோவ்-32 ரக விமானங்களையும் வரவேற்கும் நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) கலந்து கொண்டார்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவுத்த ஜெனரல் குணரத்ன, இந்த விமானங்கள் கடல்சார் கண்காணிப்பு மற்றும் கடலோர போதைப்பொருள் கடத்தல் வளையம்  தொடர்பான ஆய்வு நடவடிக்கைகள், கடல் கொள்ளை முறியடிப்பு நடவடிக்கைகள் மற்றும் நாடு / வெளிநாடுகளில் அனர்த்த முகாமைத்துவம்  மற்றும் மோசடி நடவடிக்கைகளை முடக்கல் என்பவற்றிற்கு பயன்படுத்தப்படும் என தெரிவித்தார்.

போரின் போது அன்டனோவ் -32 விமானம் ஆற்றிய மகத்தான சேவையை நினைவு கூர்ந்த அவர், “இந்த விமானங்கள் துருப்புக்களின் போக்குவரத்துக்கு பெரிதும் பயன்படுத்தப்பட்டன, மேலும் காயமடைந்த நபர்களையும் தாய்நாட்டிற்காக தியாகம் செய்தவர்களையும் கொண்டு சென்றன” என்றார்.

மேலும், "ஏழு ஆண்டுகளாக பழுது பார்க்கும் பணிகள் செய்யப்படாத நிலையில் அன்டனோவ் -32 விமானங்கள் , ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வழிகாட்டுதலுக் அமைய பழுதுபார்ப்புகளை மேற்கொள்வதற்காக உரிய நாடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

இந்த விமானங்கள் இன்று திரும்பி வருவது பாதுகாப்பு அமைச்சு மற்றும் இலங்கை விமானப்படை ஆகிய இரண்டிற்கும் ஒரு விஷேட சந்தர்ப்பமாக அமைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதன்போது பாதுகாப்பு செயலாளரும், படைத்தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரனஆகியோர், விமானப்படை யின் இந்த குழுமத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும்  அர்ப்பணிப்பு சேவையை பாராட்டினார்கள்.

மேலும், இந்த நிகழ்வினை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக்கொள்ள பட்டமை குறிப்பிடத் தக்கது.