பாவனைக் உட்படுத்த முடியாத வாகனங்கள் கடலுக்கடியில்

ஜூன் 12, 2021
  • வடக்கு கடலில் செயற்கை கடல்வாழ் உயிரின வளர்ப்பதற்கான திட்டம்

இலங்கை கடற்படையின் உதவியுடன் கடற்தொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் நேற்று (ஜூன் 11) நெடுந் தீவில்  கடல்வாழ் உயிரியல் பல்வகைமை செயற்கையாக விருத்தி செய்யும் திட்டம் ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் யாழ் தீபகற்பத்தில் உள்ள தீவுகளுக்கு வெளியே உள்ள கடலோர நீர் பிராந்தியங்களில்  உயிரியல் பல்வகைமையின் பெருக்கம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக கடற்படை தெரிவித்துள்ளது.

கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தால் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, பாவனைக்குட்படுத்த முடியாத 20 பேருந்துகள் யாழ்ப்பாணத்தில் உள்ள தீவிப் பகுதி கடல் நீருக்கடியில் சேர்க்கப்பட்டது. இது கடல் சூழலில் புதிதாக உயிரியல் பல்வகைமை  உருவாக காரணமாக அமையும் என கடற்படை நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த திட்டத்தை ஆரம்பித்து வைத்த,  கடற்படையின் வடக்கு கட்டளையகம், பாவனைக்குட்படுத்த முடியாத நிலையில் கைவிடப்பட்ட  நான்கு பேருந்துகளையும்  சயுர கப்பலின் மூலம் எடுத்துச் சென்று யாழ்ப்பாணத்திற்கு பால் உள்ள அப்பாலுள்ள நெடுந்தீவு கடற் பிராந்தியத்தில் மூழ்கச் செய்தது.

இவ்வாறு செயற்கையாக உருவாக்கப்படும் வாழிடங்கள் குறித்த பகுதியில் உயிரியல் பல்வகைமை அதிகரிக்க காரணமாக அமையும் அதேவேளை மீன் இனங்கள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களாகவும் மாறும் என கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெரும்பாலான மீனினங்கள் இவ்வாறாக கைவிடப்பட்ட செயற்கை வாழிடங்களில் செயற்கை வாழிடங்களில் பெரும்பாலும் இனப்பெருக்கம் செய்கின்றன கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.