1758 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

ஜூன் 13, 2021

வெலிகமை, பொல்வதுமேதர கரையோர பிரதேசத்தில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 219.8 கிலோ கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் 09 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ள ஹெரோயின் போதைப் பொருளின் சந்தைப் பெறுமதி சுமார் 1758 மில்லியன் ரூபா எனவும் இப்போதைப்பொருட்கள் பல நாள் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் படகுகளில் சூட்சமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் கடற்படை தெரிவித்துள்ளது.

பல நாள் மீன்பிடி படகு மற்றும் ஒரு டிங்கி என்பன தடுத்து வைக்கப்பட்டு சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நடவடிக்கைகள் சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.