குண்டசாலையில் 1000 படுக்கைகளைக் கொண்ட இடைநிலை பராமரிப்பு நிலையம் ஸ்தாபிப்பு
ஜூன் 14, 2021குண்டசலை மகாமேவுனவ பெளத்த நிலையம், சுகாதார பிரிவு| அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் கொரோனா நோயாளிகளை பராமரிக்கும் 1000 படுக்கைகளைக் கொண்ட ஒரு இடைநிலை பராமரிப்பு நிலையமாக இராணுவத்தினரால் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இராணுவத்தின் 11 ஆவது பிரிவின் பொது கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் கித்சிறி லியனகேவின் வழிகாட்டுதலுக்கு அமைய 1வது ரைபபிள் படையணி மற்றும் பொறியியலாளர் சேவைகள் படையணி வீரர்கள் இந்த புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
மேலும். 11 பிரிவின் படைவீரர்கள், கம்பளை குருந்துவத்தையில் செயற்படாத நிலையில் காணப்பட்ட தேயிலை தொழிற்சாலையை கொவிட் - 19 நோயாளிகளை பராமரிக்கும் ஒரு இடைநிலை பராமரிப்பு நிலையமாக மாற்றியமைத்துள்ளனர்.
இவ்வாறு மாற்றியமைக்கப்பட்டுள்ள இடைநிலை பராமரிப்பு நிலையத்தில் சுமார் 300 நோயாளர்களை பராமரிக்க முடியும் என இராணுவம் தெரிவித்துள்ளது