முல்லைத்தீவு சமூக நல திட்டங்களில் இராணுவமும் கைகோர்ப்பு

ஜூன் 15, 2021

இராணுவத்தினரால் முன்னெடுக்கப்படும் சமூகநல திட்டங்களில் ஒரு பகுதியாக வறுமைக் கோட்டின் கீழ் வசிக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கில் அண்மையில் முல்லைத்தீவில் உள்ள மன்னங்கடல் பிரதேசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழைக் குடும்பத்திற்கு புதிய வீடு ஒன்றினை நிர்மாணிக்கும் பணிகள் அண்மையில் முன்னெடுக்கப்பட்டது.

இந்த புதிய வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள், வண. மகா சங்கத்தினரின் நிதி உதவியுடன் இராணுவத்தின் தொழில்நுட்ப மற்றும் மனித வலுவினைக் கொண்டு முன்னெடுக்கப்படவுள்ளது.

பயனாளியின் முன்னிலையில் சமய அனுஷ்டானங்களில் பின்னர் கட்டுமானத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

இதேவேளை, 59 பிரிவின் 12வது இலேசாயுத படை வீரர்கள் சுகாதார அதிகாரிகளினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கமைய முல்லைத்தீவு வைத்தியசாலை வளாகத்தில் சிரமதான பணியினை மேற்கொண்டனர்.