முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும், இராணுவ பதவி நிலை பிரதானியுமான (ஓய்வு) ஜெனரல் சிரில் ரணதுங்க இயற்கை எய்தினார்
ஜூன் 17, 2021இலங்கை இராணுவத்தில் மிகவும் மரியாதைக்குரிய மற்றும் மிகவும் பாராட்டப்பட்ட இராணுவத் தலைவர்களில் ஒருவரான முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும், இராணுவ பதவி நிலை பிரதானியுமான (ஓய்வு) ஜெனரல் சிரில் ரணதுங்க புதன்கிழமை (16) தனது 91 வயதில் இயற்கை எய்தினார். 1980 களில் இலங்கை இராணுவ படைப்பிரிவின் படைத் தளபதி , கூட்டு நடவடிக்கைக் கட்டளை மற்றும் இராணுவ பதவி நிலை பிரதானி ஆகிய தலைமை பொறுப்புக்களை வகித்த அவர், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் பப்புவா நியூகினியா மற்றும் ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கையின் உயர் ஸ்தானிகராக பணியாற்றியிருந்ததுடன், சேர் ஜோன் கோத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் வேந்தராக நியமிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
அன்னாருக்கான இறுதி சடங்குகள் அவரது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுடன் மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டதாக வியாழக்கிழமை (17) நண்பகல் 12.30 மணிக்கு பொரளை பொது மயானத்தில், சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய இடம்பெறவுள்ளதுடன், அவரது குடும்பத்தவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இராணுவ சம்பிரதாயங்களுக்கமைய மேற்படி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டவுள்ளன.
தீபகற்பத்தில் குருநகர் பகுதியில் 1971 ஆம் ஆண்டு காலப்பகுதியில் போர் சூழல் உக்கிரமடைவதை தடுப்பதற்கான தீவிர நடவடிக்கைளில் அவர் பெருமளவில் பங்களிப்பு செய்திருந்த சிரேஷ்ட அதிகாரியான அவர், விஸிஸ்ட சேவா விபூசணய பதக்கம், இராணுவ அலங்காரம் உள்ளிட்ட பல பதக்கங்கள் தாய்நாட்டிற்கான சேவைக்காக வழங்கப்பட்டுள்ளன.
1977 ஆம் ஆண்டு ஜனவரியில் அவர் இராணுவ தலைமையகத்தின் இராணுவ செயலாளராகவும், 1978 ஆம் ஆண்டு ஜனவரியில் பனாகொடை மேற்கு படைத்தளத்தின் கட்டளை தளபதியாகவும் நியமிக்கப்பட்டார். 1978 பெப்ரவரியில் அவர் பிரிகேடியர் பதவிக்கு நிலை உயர்த்தப்பட்டார். 1980 ஜனவரியில் அவர் மேற்கு படைகளின் கட்டளைத் தளபதியாக பணியாற்றியதோடு உதவிப் படைகளின் தளபதியாகவும் நியமிக்கப்பட்டார். அத்தோடு இராணுவத்தினரின் எதிர்காலத்திற்கான வைப்பு நிதியத்தை உருவாக்குவதற்கும் பங்களிப்புச் செய்திருந்தார்.
1982 பெப்ரவரியில் அவர் இலங்கை இராணுவத்தின் பதவி நிலை பிரதானியாகவும், யாழ். பாதுகாப்பு படைத் தளபதியாகவும் நியமிக்கப்பட்டார். குறித்த காலத்தில் போர்க்குணம் மிகுந்த தமிழ் பகுதியான குருநகரில் சேவையாற்றினார். அப்பகுதியில் இராணுவ புலனாய்வு துறையை நிறுவி ஊக்குவித்த அவர் , 1983 இராணுவத்திலிருத்து ஓய்வு பெற்றார்.
ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, ஜெனரல் ரணதுங்க விமான நிலையம் மற்றும் விமான சேவைகளின் தலைவராக பணியாற்றியிருந்ததுடன், ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச அவர்களினால் 1990 ஆம் ஆண்டு பெப்ரவரி பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டதுடன், அங்கு பாதுகாப்பு அமைச்சின் வரவு செலவு விவகாரங்களுக்கு பொறுப்பாகவும் செயற்பட்டார். பின்னர் அவர் 1993 ஆண்டு பாதுகாப்பு செயலாளர் பதவியில் இருந்து விலகினார்.
நன்றி : www.army.lk