மார்ச் 22, 2019

'திரிபிடகபிவந்தனா' வாரத்தினை முன்னிட்டு பாதுகாப்பு அமைச்சில் பல சமய நிகழ்வுகள் ஏற்பாபடு

'திரிபிடகபிவந்தனா' வாரத்தினை முன்னிட்டு பாதுகாப்பு அமைச்சில் விஷேட சமய நிகழ்வுகள் பல இன்றைய தினம் (மார்ச் , 22) ஏற்பாடு செய்யப்பட்டன. இவ்விஷேட சமய நிகழ்வுகளில் கலந்து கொண்து அனுசாசனம் வழங்கிய ரத்மலானை பௌத்த ஆராய்ச்சி மையத்தின் பணிப்பாளர், வண. ஹேகொட விபஸ்ஸி தேரர் அவர்கள், "ஜனாதிபதியின் உன்னத கருத்துக்களை உணர, திரிபீடகம் ஒரு தேசிய பாரம்பரியம் மற்றும் உலக பாரம்பரியமாக மட்டுமல்லாமல் எதிர்காலத்தில் இது தனிப்பட்ட மரபியலாகவும் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்" என தெரிவித்தார்.

பாதுகாப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இவ்விஷேட சமய நிகழ்வுகளில் அமைச்சில் பணிபுரியும் பெரும்பாலான உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டு அனுசாசனம் பெற்றுக்கொண்டனர். அதனைத்தொடர்ந்து தியானித்திருத்தல் மற்றும் தர்ம சொற்பொழிவு என்பனவும் இடம்பெற்றன. இவ்விரு நிகழ்வுகளும் வண. ஹேகொட விபஸ்ஸி தேரர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. மேலும், தேரர் அவர்களினால் திரிபீடகத்தின் வரலாறு மற்றும் அவற்றின் முக்கியத்துவம் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது. நிகழ்வின் இறுதியில் பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளினால் வண. ஹேகொட விபஸ்ஸி தேரர் அவர்களுக்கு 'அட்டபிரிகர' வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், தேசிய புலனாய்வு மத்திய நிலையத்தின் தலைவர், பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி, ஊடக பணிப்பாளர், முப்படைகளின் சிரேஷ்ட அதிகாரிகள்,மற்றும் பாதுகாப்பு அமைச்சின் ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

உலக பாரம்பரிய மரபுரிமை சொத்தாக பெளத்தர்களின் புனித நூலான தேரவாத திரிபிடகம் அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் பணிப்புரைக்கமைய 'திரிபிடகபிவந்தனா' வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பெளத்தர்களின் புனித நூலான தேரவாத திரிபிடகம் மாத்தளை அளுவிகார விகாரையில் இடம்பெற்ற விஷேட வைபவத்தின் போது இலங்கையின் தேசிய மரபுரிமை சொத்தாக ஜனாதிபதி அவர்களினால் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் (ஜனவரி,05) பிரகடப்படுத்தப்பட்டது.

தேசிய மரபுரிமையைக் கொண்ட தேரவாத திரிபிடகத்தினை உலகளாவிய பாரம்பரிய சொத்தாக யுனெஸ்கோ பிரகடனப்படுத்தவேண்டும் என்ற கோரிக்கையுடன் 'திரிபிடகபிவந்தனா' வாரம் நாளை (மார்ச் , 23)நிறைவுபெறவுள்ளது. புனித தலதா மாளிகையில் இடம்பெறவுள்ள நிறைவு தின நிகழ்வில் மகா சங்கத்தினர்கள் மற்றும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.