உலர்ந்த மஞ்சள் மற்றும் பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது
ஜூன் 17, 2021சிலாவத்துறை, கொண்தம்பிட்டி, மன்னார் மற்றும் அரிப்பு ஆகிய கடற்கரைப் பிரதேசத்தில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 370.6 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் மற்றும் 294.1 கிலோகிராம் பீடி இலைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
இதற்கமைய, கொண்தம்பிட்டி கடற்கரையில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது உலர்ந்த மஞ்சள் நிரப்பப்பட்ட 13 பொதிகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
இதேபோன்று அரிப்பு கடற்கரை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு நடவடிக்கையின்போது 3 பைகளில் நிரப்பப்பட்ட பீடி இலைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.
இந்த கடத்தல் நடவடிக்கையுடன் தொடர்புடையவர்கள் என மன்னார், பள்ளிமுனை பிரதேசத்தைச் சேர்ந்த 33 மற்றும் 37 வயது வயதுடைய சந்தேக நபர்கள் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக மன்னார் பொது சுகாதார பரிசோதகர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்டுள்ள ஒருதொகை உலர்ந்த மஞ்சள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்கு யார் சுங்கத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள அதேவேளை, கைப்பற்றப்பட்டுள்ள பீடி இலைகள், சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள கடற்படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
முன்னெடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும்சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்டதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.