சேதனப் பசளை உற்பத்தி செய்யும் நடவடிக்கை இராணுவத்தினரால் ஆரம்பம்
ஜூன் 18, 2021கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள 5வது இராணுவ மகளிர் படையணி வீராங்கனைகள், படை முகாம் வளாகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கழிவுகளையும் குப்பைகளையும் பயன்படுத்தி 160,000 கிலோ கிராம் சேதன பசளையை உற்பத்தி செய்தனர்.
சேதன பசளை உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான ஜனாதிபதியின் தொலைநோக்கு திட்டத்திற்கிணங்க, மே 16ம் திகதி, கிழக்கு பாதுகாப்பு படை கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரியவின் அறிவுறுத்தலுக்கமைய 5வது இராணுவ மகளிர் படையணி வீராங்கனைகளினால் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
5வது இராணுவ மகளிர் படையணி கட்டளை அதிகாரி மேஜர் எல் ரத்னபாலாவின் மேற்பார்வையில் இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.